Monday, February 16, 2015

ஏதோ சில நினைவுகள் ..
நாங்கள் இருப்பது வெளிநாட்டில்.கண்டிப்பாக வருடத்துக்கு ஒரு முறை நம் நாட்டுக்கு செல்வோம்.உறவினர்கள் வீட்டுக்கு பெரும்பாலும் போன் செய்து வரலாமா என்று கேட்டுவிட்டு செல்வோம்.எல்லோருமே மகிழ்ச்சியுடன் வரச்சொல்லுவார்கள்.எங்களை வந்து பார்ப்பவர்களும் உண்டு.எல்லார் வீட்டுக்கும் செல்லமுடியாது ..மிக மிக நெருங்கிய உறவுகளை தவிர்க்கவும் முடியாது.ஆனால் எங்களுக்கு மிக மிக வேண்டிய ஒருத்தருக்கு போன் பண்ணி வரலாமான்னு கேட்டால் முதலில் அந்த அம்மா எங்க நம்பரை பார்த்ததும் எடுக்கவே மாட்டாங்க..ஒரு நாலு அஞ்சு தடவை அடிச்சு பார்த்து சரி போ ..என்று அலுத்துபோய் எதற்கும் இது கடைசி தடவை என்று வெறுத்து போய் அடிச்சால் எடுத்து..சாரிங்க ..விருந்தாளி வந்திருக்காங்க..நீங்க வரீங்களா ..நாங்க வெளில கிளம்பிட்டு இருக்கோம்..பரவாயில்லை வாங்க..இது உங்க வீடு..இங்க வரதுக்கு அனுமதி கேக்கணுமா ..ன்னு தயங்கி தயங்கி பேசுவாங்க..ரொம்ப நெருங்கிய உறவு வேற ..வெளிநாட்டிலேந்து போய் பாக்கமலும் வர முடியாது..வெக்கம் கெட்டு போயிட்டு ..அவங்க வேண்டா வெறுப்பா குடுக்கற காப்பிய குடிச்சுட்டு..அசடு கொட்ட வெளியேறுவோம்..மிக நெருங்கின சொந்தம்..நம்ம கடமைன்னு ஒண்ணு ு இருக்கே ..நல்ல மரியாதை..!!!!!!!!வேறு எங்கு போனாலும் எங்களை பார்த்து சந்தோஷப்படும் , அன்பாக உபசரிக்கும் உறவுகளுக்கு மத்தியில்..இப்படி ஒண்ணு.. !!!!!!!!!!!!!!ஒதுங்கி போய்டலாமா ? இது நடப்பது .... ஊருக்கு போய் இறங்கியவுடன் ...........அல்லது திரும்பி வரும்போது.இந்த அவமானம் நமக்கு தேவையா தேவையா ?

Sunday, May 9, 2010

அம்மா.......
என்னை தாயாக ஆக்கி அவள் எந்தன் சேயாகி
உலகத்திற்கு என்னை அம்மா என்று காட்டியவள்.
பொறுமையின் திலகம் அவள்.கோபமே வராத என் சின்ன சிட்டு.
சிறகுகள் முளைத்தபோதும் எல்லை மீறாத என் சொல்லையும் மீறாத
என் சொக்கத்தங்கம் அவள்.
வீடும் வேலையுமாக எந்திரமாக இருந்த என்னை
உலகம் என்ன என்று காட்டிய தித்திக்கும் தேன் துளி அவள்.
நான் கோபமாய் இருக்கையில் எனக்கு அறிவுரை சொல்லும் என் குரு அவள்.
face book ஐ எனக்கு அறிமுகம் செய்து அதில் சில நண்பர்களையும் சேர்த்துவிட்டு
என் பொழுதை நல்ல விதமாக போக்க உதவிய என் அன்பு செல்லம்.
தான் பள்ளியில் படிப்பதை எல்லாம் எனக்கு சொல்லித்தந்து
அதன்மூலம் தானும் கற்று எனக்கும் புதிய செய்திகளை நிதம் சொல்லித்தந்த
என் ஆசான் அவள்.
என் செல்ல மகளே என் செல்வ மகளே
அடுத்த பிறவியில் நான் உந்தன் சேயாக வேண்டும்.
என் அன்பு தாயாக நீ ஆக வேண்டும்.
வாழ்க அன்னையர் தினம்.

Tuesday, March 16, 2010

வணக்கம்.